Friday 24 July 2015

கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்

சுயமுயற்சியுடன் கடினமாக உழைத்தால், எந்நிலையில் இருந்தாலும், கனவை எளிதில் நிஜமாக்க முடியும்,'' என்கிறார், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற உடுமலையை சேர்ந்த சுபரஞ்சினி.

உடுமலை, பழனியாண்டவர் நகரைச் சேர்ந்த இவர் 2010ம் ஆண்டு, பி.டெக்., ஐ.டி., பட்டம் பெற்று, ஓராண்டு ஐ.டி. துறையில் பணியாற்றினார். பின்னர் ஐ.ஏ.எஸ்., ஆவதை மட்டுமே இலக்காகக் கொண்டு முயற்சித்து இரண்டு முறை தோல்வியுற்று, மூன்றாவது முறையாக, 2014ம் ஆண்டு எழுதிய தேர்வில் அகில இந்திய அளவில் 911 வது 'ரேங்க்' பெற்று வெற்றி பெற்றுள்ளார். என்னதான் விடாமுயற்சி, கடின உழைப்பு என்ற தகுதிகள் இருப்பினும், அவற்றை வெற்றிப்பாதையை நோக்கி செலுத்துவதற்கு, சிறந்த வழிகாட்டுதல் அவசியமாகிறது. அத்தகைய வழிகாட்டுதல்களை பெறமுடியாமலே இன்று பெரும்பான்மையான இளம் தலைமுறைகள், வெற்றியின் வாயில் கதவுகளில் கூட நுழைய முடியாத சூழலில் உள்ளனர். அத்தகையோருக்கு, வழிகாட்டும்படியான தகவல்களை பகிர்ந்துள்ளார் சுபரஞ்சனி.

நாள் முழுவதும் தேர்வில் வெற்றி பெற, பயிற்சி எடுப்பதே கடின உழைப்பு என்பதா?

தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் உள்ள தகவல்களை முழுமையாக புரிந்து படிப்பதே கடின உழைப்பு. இதில் நேரத்தை கணக்கிட்டு படிக்க தேவையில்லை. கட்டாயம் படிக்க வேண்டும் என்றில்லாமல், விருப்பத்தோடு படிக்க வேண்டும்.

எந்தெந்த பாடப்பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிக்க வேண்டும்? கடினமான 
பாடத்திட்டங்களில் எவ்வாறு பயிற்சி எடுப்பது?

பல்வேறு சூழ்நிலைகளை காரணமாக கூறாமல், எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, சிந்தனையை ஒருநிலைப்படுத்தி படித்தால், அனைத்து பகுதிகளுமே எளிமையானவை தான். இதில் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என்ற வேறுபாடில்லாமல், அனைத்து தேர்வுகளுக்கும் முழுமையான பங்களிப்புடன் தயாராக வேண்டும். முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளுக்குமே எப்போதுமே தயாராக இருக்க வேண்டும்.

சிவில் சர்வீசஸ் தேர்வில், அடிப்படையாக அறிந்திருக்க வேண்டிய பாடங்கள்?

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்டதிலுள்ள, அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், புவியியல் பாடங்களை அடிப்படையாக கற்க வேண்டும். 



final year project centre in vellore
final year project centre in vellore


பயிற்சி நிறுவனங்களில் பயில்வதால் மட்டுமே இத்தேர்வில் வெற்றிபெற முடியுமா?

பயிற்சி நிறுவனங்கள் என்பது, இத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டிதான். அந்த வழியில் தொடர்வது, நம்முடைய முயற்சியில்தான் உள்ளது. பயிற்சி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத சூழல் உள்ள பலரும், தங்களுக்கு கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்தி, முழு ஈடுபாட்டுடன் படித்து இத்தேர்வில் வெற்றியடைந்துள்ளனர்.

தமிழில் எழுதும் வாய்ப்பு இருப்பினும், நேர்காணலின் போது எவ்வாறு தமிழ் மொழியில் எதிர்கொள்வது?
முதல் நிலைத்தேர்வில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் விடையளிப்பதற்கே வாய்ப்புள்ளது. முதன்மைத் தேர்வில், ஆங்கிலம் அல்லது இந்தியில் வினாக்கள் கேட்கப்படும், அதற்கு தமிழில் விடையளிக்கலாம். நேர்காணலின் போதும், தமிழ் மொழியிலேயே விடை கூறலாம். எந்த மொழியாக இருப்பினும், நேர்காணலில், தன்னம்பிக்கையுடன், தெளிவாக பதிலளிப்பது அவசியம்.

இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என எண்ணும் அனைவருக்கும் இது சாத்தியமா?

சுய முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு இருந்தால், நிச்சயம் இத்தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியம்.

பிற துறைகளில் பணியாற்றியபடியே இத்தேர்விற்கான பயிற்சி எடுக்க முடியுமா?

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பலருக்கு தற்போது, ஒரு பணியில் இருப்பது அவசியமாகிறது. அவ்வாறுள்ளவர்கள், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற ஒருவரின் வழிகாட்டுதல் அல்லது பயிற்சி நிறுவனங்களில் கற்றுத்தரப்படும் அடிப்படை வழிமுறை, எத்தனை முறை இத்தேர்வை எதிர்கொள்ள முடியும், வயது வரம்பு, பாடத்திட்டம் அனைத்தையும் அறிந்து கற்றுக்கொண்டு, பணியில் உள்ளபோதே, இத்தேர்விற்கான முயற்சியிலும் இறங்கலாம். ஆனால், அம்முயற்சி ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.


engineering tuition center in vellore
engineering tuition center in vellore


ஐ.ஏ.எஸ் மட்டுமே ஆக வேண்டும் என்ற இலக்குடன் படித்து, பின்னர், பிற துறைகள் கிடைத்தால் என்ன செய்யலாம்?

ஒவ்வொருவரின் சூழ்நிலையை பொறுத்தது. கிடைத்த பிரிவில் பணியாற்றியபடியே, இறுதி வாய்ப்பு வரை விடாமுயற்சியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 

இத்தேர்வில், பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனரே?

பெண்கள் பலதுறைகளிலும் இன்று பெண்கள் சாதித்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் இத்துறைகளிலும் பெண்கள் முன்னேறிவருவது பெருமைகொள்ள வேண்டிய ஒன்று. 
இதுபோன்று பல நிலைகளில் தோல்விகளை சந்தித்து, அவற்றை வெற்றிப்படிகளாக மாற்றிய ஒவ்வொருவரின் முயற்சியையும், எடுத்துக்காட்டாய் மட்டுமின்றி, வழிகாட்டிகளாகவும் கொண்டு நமது இலக்கை நோக்கி பயணிப்போம்.


Engineering Tuition Center in Vellore

Final Year Project Center in Vellore

Monday 20 July 2015

மலை கிராமத்திலிருந்து முதல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று தமிழக அளவில் 4-வது இடம் மாணவர்

திண்டுக்கல் மலைகிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், முதன் முறையாக ..எஸ். தேர்வில் வெற்றிபெற்ற தமிழக அளவில் 4-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆடலூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் டி.செல்வராஜ். இவர் ராஜபாளையம் அருகே கிருஷ் ணாபுரம் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மகன் டி.எஸ்.விவேகானந்தன். இவர், IAS Civil Services Exam (ஐஏஎஸ் தேர்வில்) அகில இந்திய அளவில் 39-வது இடத் தையும், தமிழக அளவில் 4-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகிராமத்தைச் சேர்ந்த மாணவர் ..எஸ். தேர்வில் வெற்றிபெறுவது இதுவே முதன்முறையாகும்.
டி.எஸ். விவேகானந்தன், ராஜபாளையத்தில் பள்ளிப் படிப்பையும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பையும் முடித்துள்ளார். பின்னர், சிவகாசி தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், 2012-ம் ஆண்டில் நடந்த யூனியன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி, 229-வது இடம் பிடித்து வருமான வரித்துறை உதவி ஆணையராக புதுடெல்லியில் பணியாற்றி வந்தார். தொடர்ந்து யூனியன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய டி.எஸ்.விவேகானந்தன், தற்போது .எஸ்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இவரது மனைவி ரோசஸ் சுகன்யா IPS .எப்.எஸ். அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்து வருகிறார்--சரவணக்குமார் வே (கிராமத்து இளைஞன்).